டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிரான வழக்கு: பிற்பகல் 2.30 மணிக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிரான வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுக்கடைகளை கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா எனவும் கேட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் ஆன்லைனில் மதுபானத்தை விற்க முடியுமா எனவும் சென்னை ஐகோர்ட் கேட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா என்பது குறித்தும் விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் குறித்து ஐகோர்ட்டிடம் கேட்டுள்ளது.

தமிழக காவல்துறை முன் ஏற்பாடுகள்:

நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளது. கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும் எனவும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: