வேலை ஆட்கள், பொருட்கள் வராததால் மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தாமதம்: ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிப்பு

திருப்பரங்குன்றம்:  வேலை ஆட்கள், கட்டுமான பொருட்கள் வராததால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தாமதமாகி உள்ளது. மதுரை மாவட்டம், தோப்பூர் அருகே சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் சுமார் 5.5 கிமீ பரப்பளவுள்ள பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த 2019, டிசம்பர் மாதம் துவஙகி நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொரானா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று (மே 4) முதல் ஊரடங்கில் கட்டுமான பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி என துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெளிமாவட்ட வேலை ஆட்கள் மற்றும் சில கட்டுமான பொருட்கள் இன்னும் வந்து சேராததால் பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் வேலை ஆட்கள், கட்டுமான பொருட்கள் வந்தவுடன் பணிகள் துவங்கும் என தெரிகிறது. கொரோனா தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 2019, ஜனவரி மாதம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனாலும், இதுவரை சுற்றுச்சுவர் பணிகளே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான நிதியும் ஒதுக்கப்படவில்ைல.

Related Stories: