பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு கோயில் நிதி 10 கோடி வழங்கும் அறிவிப்பு வாபஸ்

* அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கையினால் பரபரப்பு

சென்னை: பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு கோயில் நிதி ரூ.10 கோடி வழங்கவில்லை என்றும் அறிவிப்பு திரும்ப ெபறப்பட்டது என்று அறநிலைத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி சுற்றறிக்கையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கால் தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே முதல்வர் நிவாரண நிதிக்கு தக்கார், அறங்காவலரின்  தீர்மானத்துடன் அறநிலைய துறைக்கு உரிய நிதியை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த கோயில் நிர்வாகம் எவ்வளவு வழங்க வேண்டும் என்று நிதியும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது 47 கோயில்களின் உபரி தொகை 10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட சுற்றறிக்கையில் : கோயில்களின் உபரி நிதியிலிருந்து சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக முகவரியில் கண்டுள்ள கோயில் நிர்வாகத்தினர் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 36பி-ன் கீழ் உரிய அனுமதி வழங்கிட அறங்காவலர், தக்கார் தீர்மானத்துடன் உரிய படிவத்தில் முன் மொழிவுகள் அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. நிர்வாக காரணங்களினால் பார்வைக் குறிப்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டதன் அடிப்படையில் இச்சுற்றறிக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: