ஏசி இல்லாத நகை, ஜவுளி கடைகளை திறக்க அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மே 17 வரை தளர்வுகளை தமிழக அரசு அறிவித்த நிலையில் தற்போது அவற்றை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏசி வசதி இல்லாத நகைக் கடைகள், ஜவுளி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது அந்த ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸ் தொற்று குறைவாக உள்ள பகுதிகள், அதிகம் உள்ள பகுதிகள் என்று பிரிக்கப்பட்டு அவற்றுக்கான தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்ததுடன் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதன்படி கடைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும். இது தவிர பள்ளி, கல்லூரிகள், உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, சுற்றுலா ஆகியவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த அறிவிப்பை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ள நிலையில்  அவற்றை அமல்படுத்துவதற்காக நேற்று  அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், ஊரடங்கு தொடர்பாக, நேற்று முன்தின அறிவிக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. அத்துடன், புதியதாக சில அம்சங்கள் நேற்றைய அரசாணையில் சேர்க்கப்பட்டுள்ளன்.

 அதன்படிம் தேதி முதல் மே 17ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட விவசாயப் பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளலாம். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்கக் கூடாது, மதம் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடத்தகூடாது.  ஏசி பொருத்தப்பட்ட நகைக் கடைகள், ஏசி வசதி கொண்ட ஜவுளிக்கடைகள், ஏசி வசதி கொண்ட டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், ஆகியவை இயங்க அனுமதியில்லை. இதன்படி, ஏசி வசதி கொண்ட ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்பதால், ஏசி இல்லாத இந்த கடைகள் இயங்க அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும். 10 சதவீத ஊழியர்களுடன் (20 பேர்) ஐடி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், அந்த ஊழியர்கள் நிறுவனத்தின் வாகனத்தில் மட்டுமே பணிக்கு வரவேண்டும். இதுபோல், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர் வீட்டில் இருந்து அலுவலக பணி செய்யலாம். என்பன உள்ளிட்டவை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணை இன்று முதல் அமலுக்கு வருகிறது.எனவே இதை தமிழகம் முழுவதும் நடைமுறைப்

படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2 ஆண்டு சிறை

தமிழக அரசாணை எண்217ன் படி பதிவுத்துறை உள்பட பிற இன்றியமையாத துறையினர் 100 சதவீதம் இன்று முதல் பணிபுரிய வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. பணிக்கு செல்ல எவ்வித அனுமதியும் (இபாஸ்) ெபறத் தேவையில்லை. பேரிடர் மேலாண்மை விதி 51ன் கீழ், இன்றியமையாத பணிக்கு செல்லும் அரசு ஊழியரை பணிக்கு செல்ல விடாமல் தடுத்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: