சென்னையில் சர்வதேச திரைப்பட விழாக்கள் முடக்கம்

இந்தியாவில் அதிகமான சர்வதேச திரைப்பட விழாக்கள் நடக்கும் நகரங்களில் சென்னையும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டின் பட விழாக்கள் நடக்கும், பல அமைப்புகள் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச பட விழாக்களை நடத்தும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு, சமூக இடைவெளி இவற்றின் காரணமாக இந்த விழாக்கள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பட விழா முதலில் கேன்சில் தொடங்கும் பின்பு வெனிஸ், மும்பை, கல்கத்தா, கோவா, கேரளா அதன் பிறகு சென்னையில் நடக்கும். இதுதான் சர்வதேச பட விழாக்களின் சங்கிலித்தொடர்.

தற்போது இந்த தொடர் அறுபட்டிருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழா ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மாதத்தில் நடக்கும் என்பதும் உறுதியில்லை. இதனால் உலகம் முழுக்கவே சர்வதேச திரைப்பட விழாக்கள் நடைபெறாது என்றே தெரிகிறது. இதுகுறித்து சர்வதேச படவிழாக்களை நடத்தும், இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் செயலாளர் தங்கராஜ் கூறியதாவது: டிசம்பரில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடப்பது சந்தேகம். தமிழக அரசு அனுமதியும், நிதியும் அளித்து தியேட்டர்கள் திறந்தால் மட்டுமே நடக்கும் என்றார்.

Related Stories: