ஊத்துக்கோட்டை போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

ஊத்துக்கோட்டை: நாடு முழுவதும் பரவும் கொரோனா தொற்றால் காவல் துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் எல்லைக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூர்பேட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளில் 190 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காவல் துறையினருக்கும், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி. அரவிந்தன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் டிஎஸ்பி மற்றும்  இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, சிறப்பு எஸ்.ஐ, தலைமை காவலர்கள் மற்றும் போலீசாருக்கு ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் டாக்டர் பிரபாகரன் தலைமையில் கொண்ட மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

வைட்டமின் மாத்திரை

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் போலீசார், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், டிராபிக் வார்டன்கள், தன்னார்வலர்கள் உட்பட 2,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுப்படி கபசுர சூரண பவுடர், ஜிங் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் தலா 20, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், சோப், முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது.

Related Stories: