இங்கிலாந்தை தொடர்ந்து ரஷ்யா; ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா தொற்று உறுதி...எப்படி வந்தது குறித்து தீவிர விசாரணை

மாஸ்கோ: சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா  தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைபோல், ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் தனது கொர முகத்தை காட்டி வருகிறது. ரஷ்யாவில் இதுவரை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 1,073 உயிரிழந்த நிலையில், 11,619 பேர் குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில், நேற்று மட்டும், 7,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, ரஷ்யாவில் ஊரடங்கை மே11-ம் தேதி வரை நீட்டித்து அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். தற்போது,  பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தற்போது தன்னுடைய பணியில் இருந்து தற்காலிமாக ஒதுங்கி இருக்க போவதாக பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதும் உறுதியாகவில்லை. இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதித்து குணமடைந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: