ராயபுரம் மண்டலத்தில் ஒரே நாளில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் ஒருவர், ராயபுரத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் ஒருவர், வியாசர்பாடியில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் ஒருவர் என மூவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் தூய்மை பணியாளர் ஒருவருக்கும், ராயபுரம் 50வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 2 சுகாதாரத்துறை ஊழியர்கள், 2 ஒப்பந்த ஊழியர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மூலக்கொத்தளம் கெனால் தெருவை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், மண்ணடி தையப்பன் முதலி தெருவை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர், அவரது மனைவி, மகன் உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பூக்கடை சைவ முத்தையா தெவில் 5 பேருக்கும், சிமிட்ரி சாலையில் ஒருவருக்கும்,  வண்ணாரப்பேட்டை நியூ லேபர் காலனியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குரோம்பேட்டை மற்றும் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

* ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியரின் 60 வயது கணவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த செவிலியரின் குடும்பத்தினருக்கு நடத்திய சோதனையில் செவிலியரின் மூத்த மகன் மற்றும் மருமகள், மற்றொரு மகன் ஆகிய 4 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர்.  

* ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்தின் போது கர்ப்பிணியும், அவரது குழந்தையும் இறந்துள்ளனர். நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் பணியாளர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

Related Stories: