கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச் சாவடியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் மத்திய சுகாதார அதிகாரிகளான லோகேந்திர சிங், அனிதா டோக்ர், டாக்டர் விஜயன் ஆகியோர் எளாவூர் சோதனை சாவடியில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும்  பணியாற்றிவரும் ஊழியர்களை பற்றியும் வெளிமாநிலத்தில் இருந்து காய்கறி, மளிகைப்பொருட்கள்  லாரிகள் மூலம் தினந்தோறும் இரவு பகலாக சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளது.

அப்போது வரும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டதா? டிரைவர்களுக்கு காய்ச்சல், இருமல் சளி உள்ளதா? அரசு வலியுறுத்திய விதிமுறைகள் பின்பற்றபப்டுகிறதா? என ஆய்வு செய்தனர். அத்தோடு கார், இருசக்கர வாகனங்கள்  பதிவேடுகளில் எத்தனை நபர்கள் செல்கின்றனர் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.  அதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை எந்த முறையில் அளிக்கப்பட்டு வருகிறது கேட்டறிந்தனர். அதற்கு கும்மிடிப்பூண்டி சுகாதாரத்துறை அலுவலர் கோவிந்தராஜ்  10 பேர் உறுதி செய்யப்பட்டது. அதில் 8 பேர் குணமடைந்து தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய குழுவினர் தெரிவித்தார். அவருடன் கோட்டாட்சியர் பெருமாள், வட்டாட்சியர் குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: