ஊரடங்கின்போது குடும்ப வன்முறையில் சிக்கும் பெண்கள்: தப்பிக்க வரலட்சுமி யோசனை

சென்னை: கொரோனா ஊரடங்கு ஒரு மாத்திற்கு மேலாக நீடிக்கிறது. வீட்டுக்குகள் குடும்ப உறுப்பினர்கள் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் குடும்பத்திற்குள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில் இருந்து தப்பிக்க பெண்களுக்கு நடிகை வரலட்சுமி ஆலோசனை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: பல பெண்கள் இந்த லாக் டவுன் நேரத்தில் வீட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பல பெண்கள் தப்பிக்க வழி தெரியாமல் இருக்கின்றனர். வீட்டிலேயே மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர் .

வீட்டில் உள்ள பெண்களை யாராவது துன்புறுத்தினால் பெண்கள் தாராளமாக புகார் தரலாம். மகளிர் ஆணையத்துக்கு தொலைபேசியில் அழைத்தால் நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் . இந்த நேரத்தில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். ஒருவர் வன்முறையில் சிக்குவதை அறிந்தால் உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு வரலட்சுமி கூறியுள்ளார்.

Related Stories: