சென்னை: ஆஸ்கர் விருதுகளை வென்ற லைஃப் ஆஃப் பை என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் இர்பான்கான் ‘பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர். அங்கு அவரது தாய் சயீதா பேகம். மற்றும் சகோதரிகள் வசிக்கிறார்கள்.
இர்பான்கானின் தாய் சயீதா பேகம் முதுமை காரணமாக பலவேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை ஜெய்ப்பூரில் நடந்து. குறைவான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.