முதல்வருக்கு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நன்றி

சென்னை: தமிழ்நாடு மாநில சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க மாநிலத் தலைவர் கோவிந்தராஜு, துணைச்செயலாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க கடுமையாக உழைத்து வரும் உள்ளாட்சித்துறை, காவல்துறை, மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்களின் சேவையை பாராட்டியதுடன், கொரோனா நோய் மேற்படி பணியாளர்களின் உயிரை பறித்துவிடுமென்றால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் அரசு நிதி உதவி வழங்கும்., அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் .,

அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்., அவர்களது சேவையை பாராட்டி அரசு விருது வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கப் போராடும் அனைவரையும் ஊக்கப்படுத்தும் இந்த அறிவிப்பினை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: