உ.பியில் ஜூன் 30 வரை மக்கள் கூடுவதற்கு தடை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 30ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் வரும் 3ம் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 3ம் தேதி ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகளுடன் நேற்று கலந்தாலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் பேட்டியளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘வரும் 3ம் தேதி ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டாலும், ஜூன் மாதம் 30ம் தேதி வரை பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’’ என்று கூறினார்.

Related Stories: