கொரோனாவால் கும்பக்கரை ‘வெறிச்’

பெரியகுளம் : கொரோனா ஊரடங்கால் கும்பக்கரை அருவி சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கிமீ தொலைவில், கொடைக்கானல் மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானலில் மழை பெய்தால், இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும். அருவியில் குளித்து மகிழ, தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநில சுற்றுலாப்பயணிகளும் அதிகமாக வருவர். இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதன்படி கும்பக்கரை அருவியும் மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குவியும் இந்த நேரத்தில், ஆட்களின்றி கும்பக்கரை அருவி வெறிச்சோடிக் கிடக்கிறது. மேலும், அருவியில் நீர்வரத்தும் குறைவாக உள்ளது.

Related Stories: