தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகி மீது பழிவாங்கும் நடவடிக்கை: 1000க்கும் மேற்பட்ட ரேஷன்கடைகள் மூடல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வளத்தோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 1100  ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோதண்டராமன், தலைவர் நந்தகோபால், மாநில தணிக்கைக்குழு இணை செயலாளர் சேரன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் சுற்றறிக்கையின்படி பொதுப் பணி நிலை திறன்படி செயலாளர் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையில் எவ்வித புகாரும் இல்லாத, பதிவாளர் சுற்றறிக்கையில் தெரிவித்த நிபந்தனைகளுக்கு பொருந்தாத வளத்தோட்டம் கடன் சங்க செயலாளரும் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளருமான வாசுதேவன் கீழ் பேரமநல்லூர் சங்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

வளத்தோட்டம் கடன் சங்க நிர்வாக குழு இதனை ஏற்காமல், அரசு செயலாளர் வரை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உரிய பதில் கிடைக்கும் முன்பே பொது மக்களை கொரோனா தாக்குதல்களில் இருந்து நம்மால் ஆனவரையில் உதவிடும் நோக்கத்தோடு தொடர்ந்து பணி செய்யும் நிலையில் வாசுதேவன், இணைப்பதிவாளர் மூலம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, பொதுமக்கள் நலனையும், பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய நன்றியையும் புறந்தள்ளி விட்டு வழங்கப்பட்ட தற்காலிக பணி நீக்க ஆணையை திரும்ப பெறும் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது

Related Stories: