வெப்பசலனம் காரணமாக வெயில் அதிகரிக்கும் 3 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக 104 முதல் 106 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்பதால் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கரூர், திருச்சி, மதுரை, வேலூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக நேற்று 104 டிகிரி வெயில் நிலவியது. அதைப்போன்று வெப்பசலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 மிலி மீட்டர் மழை பெய்துள்ளது.  

இதையடுத்து கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 104 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் பதிவாக கூடும் என்பதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்த வரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதனால் வெயில் 102 டிகிரி வரை இருக்கும்.

Related Stories: