தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்று ரம்ஜான் நோன்பு. ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு  தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள்.

இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் நேற்று காணப்பட்டது. எனவே இன்று(சனிக்கிழமை) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

அதன்படி ரம்ஜான் நோன்பு இன்று தொடங்குகிறது. ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதனால், தொழுகைகளை அவரவர் வீட்டில் செய்யுமாறு இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: