நிலவேம்பு மற்றும் கபசுரக்குடிநீர் வழங்க உத்தரவு: முதல்வருக்கு நன்றி

சென்னை: ஆரோக்கியம் திட்டத்தின் வாயிலாக நிலவேம்பு மற்றும் கபசுரக்குடிநீர் வழங்க உத்திரவிட்ட, முதல்வருக்கு இம்ப்காப்ஸ் தலைவர் டாக்டர் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஆயுஷ்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று முதல்வர் ஆரோக்கியம் என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதை 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள முன்னனி சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கும் பன் மாநில கூட்டுறவு நிறுவனமான இம்ப்காப்ஸ் மற்றும் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள 16 ஆயிரம் சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்கள் வரவேற்கிறோம்.

நிலவேம்பு மற்றும் கபசுரக்குடிநீர் ஆகியவற்றினை சித்த மருத்துவர்களின் பரிந்துரையின்படி பொதுமக்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும். மேற்கண்ட மக்கள் நலன்காக்கும் நடவடிக்கையினை உரிய நேரத்தில் அறிவித்து செயல்படுத்திய முதல்வர் மற்றும் தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு டாக்டர் கண்ணன் கூறியுள்ளார்.

Related Stories: