ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள் வாசிக்கும் நேரம் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் தங்களது நேரத்தை அதிக நேரம் செய்தித்தாள் படிப்பதற்கு பயன்படுத்துவதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிராண்ட் சொலுஷன்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா குறித்து மக்கள் அதிகாரப்பூரவ செய்திகளை தெரிந்து கொள்ள செய்தித்தாள் வாசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தினமும் 22 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பதில் செலவழிப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குக்கு பிறகு 38 நிமிடங்கள் செய்தித்தாள் படிக்கின்றனர்.

மக்களிடம் செய்தித்தாள் எவ்வளவு நேரம் படிப்பீர்கள் என்ற கேள்விக்கு  40% பேர் 1 மணி நேரத்திற்கும் மேலாக செய்தித்தாள் வாசிப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஊரடங்கு முன்பாக அரை மணி நேரம் மட்டுமே படித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள் வசிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருப்பதாகவும்  ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பவர்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. 42 % இருந்து 72% உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: