பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன்; கொரோனா சிசிச்சைக்காக பிளாஸ்மாவை தானமாக வழங்குக...டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பயங்கரம் இன்று உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து  இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முழுமையான பலன் தரும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டு காலம் ஆகலாம் என  கூறப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. இங்கு கொரோனாவால் இதுவரை 2376 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்த நிலையில், 808 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது  என்றும் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆபத்தான கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளின் சிசிச்சைக்காக பிளாஸ்மாவை தானமாக வழங்க வேண்டும் என கொரோனாவில் இருந்து  குணமடைந்தவர்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் உள்ள தீவிர நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையின் வரையறுக்கப்பட்ட சோதனைகளுக்கு மட்டுமே மத்திய அரசு எங்களுக்கு அனுமதி அளித்தது.அனைத்து தீவிர நோயாளிகளுக்கும், அடுத்த 2-3 நாட்களில், நாங்கள் மேலும் சோதனைகளை மேற்கொள்வோம், பின்னர் அடுத்த வாரம் அனுமதி பெறுவோம் என்றார்.  

பிளாஸ்மா சிகிச்சை:

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு,  அவற்றைப் பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது  ஏற்கெனவே மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்ட போது நல்ல பலனைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான செலவு மிகக் குறைவு, விரைந்து செய்யக்கூடியது, எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை, தடுப்பூசியைப் போலவே முறையாக பராமரித்து  கன்வெலசென்ட் செராவை நாட்டில் உள்ள எந்த பகுதிக்கும், உலக அளவிலும் எளிதாக கொண்டு செல்லலாம்.

Related Stories: