தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு: குடியரசு துணை தலைவர் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்படுவதாக குடியரசு துணை தலைவர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளை குடியரசு துணை தலைவர் பாராட்டினார். இந்த பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: