சென்னை: ஐம்பது அம்மா உணவகங்களில் 15 நாளுக்கு இலவச உணவு வழங்க நடிகர் லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா நிவாரண நிதியாக ₹3 கோடி முதல் கட்டமாக வழங்கினார் லாரன்ஸ். பிறகு தூய்மைப் பணியாளர்களுக்கு ₹25 லட்சம் வழங்கினார். நடிகர் சங்கத்துக்கு ₹25 லட்சமும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு ₹15 லட்சமும் அளித்தார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ₹50 லட்சம் வழங்கி இருந்தார்.