நிவாரண பொருள் வழங்குவதற்கு மக்களை கூட்டமாக திரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்: போலீசார் தடியடியால் பரபரப்பு

தாம்பரம்:  பீர்க்கன்காரணை தேவநேசன் நகர் 3வது தெருவில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா மற்றும் முன்னாள் கவுன்சிலர் குணா ஆகியோர் அப்பகுதி மக்களுக்கு நேற்று நிவாரண பொருட்கள் வழங்குவதாக அறிவித்து, ஒரே இடத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்களை திரட்டினர். இங்கு சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக இருப்பதாக இருந்தனர். தகவலறிந்து பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். இதை பார்த்த முன்னாள் அமைச்சர் அங்கிருந்து வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார்.

ஆனால், பொதுமக்கள் நிவாரண பொருட்கள் கிடைக்கும் என அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலையிலே சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை போலீசார் அவர்கள் தோணியில் பேசி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்காக மக்களை பாதுகாப்பற்ற முறையில் திரட்டியது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

Related Stories: