அண்ணா பல்கலை. உருவாக்கிய கிருமி நாசினியை பயன்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து துணைவேந்தர் சூரப்பா வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலை. உருவாக்கிய கிருமி நாசினியை பயன்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து துணைவேந்தர் சூரப்பா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், தனிநபர் சுகாதாரம் முக்கிய பங்கி வகிக்கிறது.

அதன் அடிப்படையில் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தலை வலியுறுத்தும் அதேவேளையில், இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய சுகாதார கருவி வடிவமைப்பு மையம் நடத்திய ஆராய்ச்சியில் புதிய கிருமி நாசினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற கிருமிநாசினிகள் மேற்பரப்பை மட்டும் சுத்தம் செய்யும் என்றும், புதிய கிருமிநாசினி, வைரஸின் முழு திறனையும் அழித்து, அதன் ஊடுருவலை தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலை. உருவாக்கிய கிருமி நாசினியை பயன்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து துணைவேந்தர் சூரப்பா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் அனுமதி பெற்ற பின் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினியை பயன்படுத்தப்படும் என வேந்தர் சூரப்பாவிடம் அமைச்சர் உறுதி அளித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: