தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவி வாங்கியதில் ஊழலா? அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்

சென்னை: கொரோனா வரைஸ் தொற்று குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக இறப்பு என்பது இல்லை. நேற்று 82 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 365 பேர் குணமடைந்துள்ளனர். ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் தமிழகத்தில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 49 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 7 பேருக்கும், திருப்பூரில் 28 பேருக்கும், கோவை 1. திண்டுக்கல் 3, நெல்லை 2, தஞ்சாவூர் 1, தென்காசி 4,  ெபரம்பூர் 3 பேர் அடங்குவர். \மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்தவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. முதலில் பிசிஆர் கிட் மூலம் தான் சோதனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்யலாம் என்று ஏப்ரல் 2ம் தேதி ஐசிஎம்ஆர் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசு ஆர்டர் செய்ததற்கு அடுத்த நாள் தமிழகத்துக்கும் அதே விலையில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 24 ஆயிரம் கிட் வந்துள்ளது. மத்திய அரசு 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்டை தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. மொத்தம் 36 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்துகிறோம்.  தமிழக அரசு சார்பில் 5 லட்சம் கிட்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முதல் தடவை ஆர்டர் கொடுத்தற்கு 3 லட்சம் கிட்டு, நாம் ஆர்டர் ெகாடுத்தற்கு 24 ஆயிரம் கிட்டும் வந்துள்ளது.

மீதமுள்ளவை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வரும். மேலும் மாநகராட்சி சார்பில் ஆர்டர் ெகாடுத்த கிட்  தமிழக அரசு கொடுத்ததோடு சேர்ந்தது தான். தமிழக அரசு அதிக விலைக்கு கொள்முதல் செய்வதாக கூறுவது தவறு. மத்திய அரசு என்ன விலைக்கு வாங்குகிறதோ அதே விலைக்கு தான் வாங்குகிறோம். மாநில அரசு இந்த விலை நிர்ணயம் செய்யவில்லை. ஒரு ஆன்டிபாடி டெஸ்ட் கருவி ₹600 வீதம் 50 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டன. மத்திய அரசு நிர்ணயம் செய்த தரச்சான்று மற்றும் விலையின் அடிப்படையில் ஐசிஎம்ஆர், கேன்சர் ஆப் இன்ஸ்டிடியூட் மூலம் தான் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று அறிந்து கொள்ளலாம். பிளாஸ்மா டெஸ்ட்டுக்கு ஐசிஎம்ஆருக்கு விண்ணப்பித்துள்ளோம். 2 அனுமதி வாங்க வேண்டும். ஒன்று வந்து விட்டது. மீதமுள்ள அனுமதிக்கு காத்திருக்கிறோம். வந்தவுடன் நோயாளிகளின் அனுமதி பெற்று பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படும். நம்மிடம் தற்போது 1 லட்சத்து 96 ஆயிரம் பிசிஆர் கிட்டுகள் உள்ளன என்றனர்.

Related Stories: