கொரோனா பாதிப்பு எதிரொலி: கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைப்பு

சென்னை: பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட  விழா, உலகின்  மிகப் பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்று. இவ்விழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட கலைஞர்கள் தவறாமல் வந்து தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்வார்கள். மேலும், உலக திரைப்படங்கள் திரையிடல், விருது வழங்குதல், திரைப்பட  வர்த்தகம், திரைப்பட நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விவாதிக்கப்படும்.இந்த ஆண்டுக்கான 73வது கேன்ஸ் திரைப்பட விழாவை வழக்கம்போல் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், கொரேனா வைரஸ் பரவல் காரணமாக வரும் ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை கடைசி வாரத்தில் நடத்த விழாக் குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். 72 ஆண்டு கால கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில், விழா நடக்காமல் போவது இது 2வது முறை. இதற்குமுன் 1978ல் பிரான்சில் நடைபெற்ற மாணவர் புரட்சியின்போது, கேன்ஸ் திரைப்பட விழா நடக்கவில்லை.

Related Stories: