வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்து வந்தால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்து வந்தால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பாக வக்கீல் ஞானசேகர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மலேசியாவில் சிக்கிய 350-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கியவர்களை மீட்டு அழைத்து வந்தால் 130 கோடி பேர் கொண்ட இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: