நோய்த்தொற்று அவருடன் முடிகிறது; உயிரிழந்தால் குணமடைந்தார் என்று அர்த்தம்...வித்தியாசமான விதிமுறையை பின்பற்றும் சிலி நாடு

சாண்டியாகோ: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 இந்தியாவிலும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 134,603 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,082,822 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 510,046 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51,160 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குணமடைந்தவர்கள் பட்டியலில் இணைத்து வருகையில் ஒரு நாடு மட்டும், இறந்தவர்களையும் குணமடைந்தவர்கள் பட்டியலில் இணைக்கிறது. தென் அமெரிக்க கண்ட நாடான சிலியில் தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்ம் மானலிச் தெரிவிக்கையில்,  “கொரோனா பாதித்து இறந்தவர்கள் மூலம் வேறு யாருக்கும் தொற்று அடுத்ததாக பரவாது. அவர்களின் நோய்த்தொற்று அவர்களோடு முடிந்துவிடுகிறது. அவர்களிடம் இருந்து நோய்த்தொற்று விலகியுள்ளது. இதனால் அவர்கள் குணமடைந்தவர்கள் பட்டியலில் வருவார்கள்” என்று கூறியுள்ளார். மேலும், சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைப்படியே இப்படி கணக்கு எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். சிலியில் சுமார் 8200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: