மும்பை ரயில் நிலையம் முற்றுகை எதிரொலி,..சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸ் குவிப்பு

சென்னை: ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் ஆங்காங்கே முகாம்களில் தங்கி  உள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு 15ம் தேதி முதல் விளக்கி கொள்ளப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. சென்னையில் தங்கி இருந்த  ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு ெசல்ல முன்பதிவு செய்தனர்.  ஆனால் ஊரடங்கு  வரும் மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வடமாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரி ெசன்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வடமாநிலத்தவர்கள் முற்றுகையிட போவதாக உளவுதுறைக்கு தகவல் கிடைத்தது. அதேநேரம் மும்பையில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் மும்பை போன்று சூழ்நிலை ஏற்படுவதை தடுக்கும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் அருகே வடமாநிலத்தவர்கள் யாரையும் விடாமல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: