தியேட்டரில் 50% மட்டும் டிக்கெட் விற்பனை,..விஜய்யின் மாஸ்டர் தள்ளிப்போகிறது

சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சில மாதங்களுக்கு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வர வேண்டியது.  ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 15ம் ேததி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. தொடர்ந்து படப்பிடிப்புகள் உள்பட சினிமா பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.  ஊரடங்கு முடிந்த பிறகும் தியேட்டர்கள் உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.

இதனால் ஒரு தியேட்டரில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படும், அதற்கேற்ப டிக்கெட்டுகள் விற்கப்படும். டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனையாகும் உள்ளிட்ட திட்டங்களை வகுத்து அதை அறிக்கையாக அரசுக்கு வழங்க தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஊரடங்குக்கு பிறகு இதற்கு ஒருவேளை அரசு அனுமதி கொடுத்தால் தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும். அதிக பட்ஜெட்டில் உருவாகி, பெரும் வசூலை எதிர்பார்த்திருக்கும் மாஸ்டர் படத்துக்கு அது சிக்கலாக அமையும். எனவே தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சில மாதங்களுக்கு மாஸ்டர் படத்தை தள்ளிவைத்து பிறகு ரிலீஸ் செய்யலாம் என படதரப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: