கீழப்புதூரில் ஊரடங்கு மீறில்; அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு: வீடு தேடி மளிகைப் பொருள் வழங்கும் திட்டம் என்ன ஆனது?

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 9 இடங்கள் முற்றிலும் முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போதிய காவலர்கள் கண்காணிப்பு பணியில் இல்லாததால் மக்கள் வெளியே நடமாடுவதை பார்க்க முடிகிறது. வீடு தேடி மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டம் அறிவிப்புடன் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்தாகவேண்டிய நிர்பந்தம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் 20 பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 9 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீழப்புதூர் பகுதியும் அடங்கும். ஆனால் அறிவிக்கப்பட்ட சூழலிலும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் தான் உள்ளது. இந்த பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இப்பகுதியில் ஒரு காவல் பாதுகாப்பு இல்லை. மேலும் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் தங்களை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாடியுள்ளனர். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கள் இல்லம் தேடி வரும் என கூறியிருந்தனர்.

ஆனால் அதும் இதுவரை செய்யவில்லை. இத்தகைய சூழ்நிலையில் தடையை தாண்டி வெளியே வரும் சூழல் எழுந்துள்ளது எனவும் கூறினர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் கேட்ட போது; 100 வீடுகளுக்கு ஒரு அதிகாரி மூலம் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுபோல் எந்தவித அறிகுறியும் இங்கு இல்லை என பொதுமக்கள் குற்றம் சாடியுள்ளனர்.

Related Stories: