புழல்: புழல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ₹4 லட்சம் மதிப்புள்ள குட்கா வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் அடுத்த கதிர்வேடு செம்பியம் - செங்குன்றம் சாலையில் புழல் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கதிர்வேடு பகுதியில் இருந்து வந்த மினி வேனை மடக்கி, டிரைவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் மினி வேனில் சோதனை நடத்தினர். அப்போது, அதில் ₹4 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், மாவா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.