டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தின் ப்ரோஃபைல் பிக்சரை மாற்றியுள்ளார். பிரதமர் இதுவரை கருப்பு கோர்ட் அணிந்திருந்த புகைப்படத்தை ப்ரோஃபைலாக வைத்திருந்தார். கொரோனா தொடர்பாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பிரதமர் முகக்கவசம் அணிந்திருந்தார். அப்போது பேசிய அவர்; நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலக்கு அளிக்கப்படும் பணிகள் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும். நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதே நன்மை தரும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பினை வெளியிடப்பட்டது எனவும் கூறினார். தற்போது அந்த புகைப்படத்தை தனது ப்ரோஃபைல் படமாக மாற்றியுள்ளார். 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
