ஊரடங்கால் அதிகரித்து வரும் கணவன் -மனைவி தகராறு பகிர்தல், புரிதலால் குறையும்: தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க தலைவர் அறிவுரை

சென்னை: ஊரடங்கு உத்தரவால் குடும்பத்தினர் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் வீட்டில் கணவன்- மனைவி சண்டை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.  இது குறித்து தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாந்தகுமாரி கூறியதாவது:  கொரோனா ஊரடங்கு உத்தரவால், குடும்ப உறுப்பினர்கள் மொத்தமும் வீட்டிலேயே இருக்கின்றனர். என்னதான் கல்வி அறிவு, நாகரிகம் வளர்ந்து இருந்தாலும், சமையலறை என்பது, பெண்களுக்கான இடமாக பார்க்கப்படுகிறது.

ஆண்கள் வெளியே சென்றால் தான் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

தற்போது அந்த சூழல் இல்லாததால், வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதனால், திரும்ப திரும்ப மனைவி உடன் மட்டுமே பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், எதையாவது ஒன்று, பழைய விஷயங்கள், ஏற்கனவே பேசி முடிந்த போன விஷயங்கள் என எதையாவது பேசி பெரிது படுத்தி சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

எனவே இதனை தடுக்க கணவன், மனைவி இருவருக்குமிடையே பகிர்தல் முக்கியம். முக்கியமாக வேலையில் பகிர்தல் முக்கியம், எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதைவிட, இருவரும் சேர்ந்து செய்வோம் என்று பகிர்ந்து கொண்டு செய்வது அவசியம்.

 ஆண்கள் டிவி, வீடியோ பார்த்துகொண்டு, மனைவியை அதை செய்து கொடு இதை செய்து கொடு என்றால், அவர்கள் சுட்டு சுட்டு அடுக்க முடியாவதில்லை. எப்படி பொறுமையாக இருப்பார்கள். காலம் மாறிபோச்சி, எனவே தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்ப்பதால், இதுபோன்ற சண்டைகளை தவிர்க்க முடியும். இந்த விவகாரங்களில் இருவருக்கும் எந்த தண்டனையும் வேண்டாம். பெண்கள் பழைய மாதிரி சமையலறையில் இருந்து வெளியே வர வேண்டும், என்ற பழைய நினைப்பில் இருந்து வெளியே வந்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

இதுவே பக்கத்து சீட்ல ஒரு பெண் வேலை செய்தால், மேம் உங்களுக்கு உதவுட்டுமா என்று கேட்கும் ஆண்களுக்கு, வீட்டில் அதுபோன்ற கேட்க மனம் வரவில்லை. வேலையின் அழுத்தம் தான் கோபம் வர காரணமாக உள்ளது. எனவே ஒருவரை ஒருவர் புரிந்து, அனுசரித்து இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: