மற்ற மருந்துகளைப் போலவே பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்; HCQ அனைவருக்குமான சிகிச்சை அல்ல...டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி

டெல்லி: கொரோனாவுக்கு சரியான தடுப்பு மருந்து இல்லாத நிலையில், மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை கொரோனா பாதித்தவர்களுக்கு தற்காலிகமாக கொடுத்து சிகிச்சை அளிக்கலாம் என அமெரிக்க  உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியது. நியூயார்க்கில் 1500 பேருக்கு இந்த மாத்திரை கொடுத்து சோதிக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது.

இதனால், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உலகளவில் தற்போது இந்த மருந்தை 70 சதவீதம் அளவுக்கு இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு மாதமும் 40 டன்  மாத்திரைகளை (20 கோடி) உற்பத்தி செய்யும் திறன் நம் நாட்டில்தான் உள்ளது.  இந்த மருந்தின் தேவையை உணர்ந்த மத்திய அரசு, ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அமெரிக்காவின் மறைமுகமாக மிரட்டலை தொடர்ந்து, மருந்தை அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் வகையில், இந்த மருந்துக்கான ஏற்றுமதி தடையை பிரதமர் மோடி நீக்கினார். தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வண்ணம் மத்திய அரசு உள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா, கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சில விளைவுகளை  ஏற்படுத்தக்கூடும் என்று சில ஆய்வக தகவல்கள் காட்டுகின்றன. ஆனால், அதற்கான ஆதரங்கள் அவ்வளவு வலுவாக இல்லை. ஐ.சி.எம்.ஆரின் வல்லுநர்கள் COVID-19 நோயாளிகள் மற்றும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் சுகாதாரப்  பணியாளர்கள் ஆகியோரின் நெருங்கிய தொடர்புகளுக்கு உதவக்கூடும் என்று கருதினர்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது அனைவருக்குமான சிகிச்சை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது இதய நச்சுத்தன்மையை ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிவகுக்கும். மற்ற மருந்துகளைப் போலவே, இது பக்க  விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இது பொது மக்களுக்கு நல்லது செய்வதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்றார்.

மிதமான மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு HCQ & Azithromycin ஆகியவற்றின் கலவை வழங்கப்பட்டால் உதவியாக இருக்கும் என்று சீனா மற்றும் பிரான்சில் ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வுகளின்  தரவு வலுவாக இல்லை. வேறு எந்த சிகிச்சையும் கிடைக்காததால், அதைப் பயன்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டது. HCQ & Azithromycin ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தும் சிகிச்சை பயனுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய  நாம் அதை விமர்சன ரீதியாகப் பார்க்க வேண்டும் மற்றும் கூடுதல் தரவைப் பெற வேண்டும்.தரவு சேகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: