ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவிக்கும் கிராம கோயில் பூசாரிகளுக்கு உதவித்தொகை மறுப்பு: அறநிலையத்துறை மீது அதிருப்தி

சென்னை: கொரோனா நிதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையை வருமானம் வரும் பெரிய கோயில்களின் நிதியில் இருந்து சிறிய கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிறிய கோயில்களில் பணிபுரியும் 84 ஆயிரம் பேருக்கு வழங்குவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இவர்கள், அனைவரும் கிராமப்புற கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள். இவர்கள் மாத சம்பளமில்லாமல் தட்டு காசு மட்டுமே பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிவாரண தொகை வழங்க அறிவிப்பு வெளியிடாதது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: