அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்; அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,  தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 -  40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.  

அதனை அடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடி, பெரிய நாயக்கன்பாளையம், திருமயம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், சிவகிரி, தாமரைப்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: