இயேசு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்: கிறிஸ்துவ மக்களுக்கு பிரதமர் மோடி புனித வெள்ளி வாழ்த்து

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து  அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு  முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து  செய்தியில், இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன. அவரது நீதி உணர்வும் அவ்வாறே இருக்கிறது. இந்த புனித வெள்ளியன்று, இயேசு  கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவு கொள்வோம். என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து:

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு காங்கிரஸ எம்.பியுமான ராகுல் காந்தி தனடு டுவிட்டர் பக்கத்தில், இந்த புனித வெள்ளி அன்று, நாம் அமைதி, சக மனிதர்களிடம் இரக்கம் மற்றும் சுய தியாகத்தின் ஆவி ஆகியவற்றால்  ஆசீர்வதிக்கப்படுவோம் என புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: