கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் முழு பலத்துடன் போராடுவோம்: தென் கொரியா, உகாண்டா அதிபர்களுடன் தொலைபேசி ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 89 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகள்  கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  

மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734-லிருந்து 5,865-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ள நிலையில் 478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் மற்றும் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினேன். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: