ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா மருத்துவப்பிரிவை விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்றுநோய் மருத்துவப்பிரிவில் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கும் புதிய முறையை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.    உலக நாடுகளை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் நேற்று புதிதாக 48  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் பலருக்கு ஆங்காங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இதற்காக பிரத்தியேகமாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வுக்காக சென்றார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் மருத்துவப்பிரிவை பார்வையிட்டார்.  மேலும் மருத்துவர்கள் மிகப்பாதுகாப்பாக கண்ணாடி அறையினுள் இருந்து கொரோனா நோய் தொற்றை பரிசோதிக்கும் பாதுகாக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தை (கோவிட் விஸ்க்) பார்வையிட்டார். அங்கு பணியில் உள்ள மருத்துவர்கள் சோதனை எவ்வாறு பாதுகாப்பாக செய்யப்படுகிறது என்பதை விளக்கினர்.

Related Stories: