எண்ணூர், ஏழுகிணறு பகுதிகளில் 2 பேருக்கு கொரோனா: தெருக்களுக்கு சீல்

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஷெராபாத் அலி (48). இவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர் என்பதால், கடந்த 3ம் தேதி பரிசோதனைக்காக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை சென்றார். அங்கு, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் இவரது வீட்டின் அருகே உள்ள தெருக்களுக்கு சீல் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய பூக்கடை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், மண்ணடியில் ஒருவர் மற்றும் முத்தியால்பேட்டையில் ஒருவர் என 5 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவுவதை தடுக்க தண்டையார்பேட்டை  நேதாஜி நகர், வஉசி நகர்,  வண்ணாரப்பேட்டை  காட்பாடா பகுதி, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மற்றும் பாரதி நகர் மெயின்தெரு, வியாசர்பாடி நியு மெகஷின் ரோடு உள்ளிட்ட பகுதி சாலைகளும் சீல் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* எண்ணூர் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், இவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர்கள் என தெரிந்தது. இதனால், இவர்கள் வசித்த பகுதியில் தெருக்களை மூடி, அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நோய் தொற்று உள்ள இருவருடன் தொடர்பில் இருந்த எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவர் தானாக முன்வந்து தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தார். பரிசோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ்  தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரையும் பரிசோதனை செய்ய திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: