தெற்கு ரயில்வே அறிவிப்பு: சென்னை-டெல்லிக்கு தினசரி சரக்கு ரயில் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ரயில்வே சார்பில் சமீபத்தில் வாராந்திர சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 9ம் தேதி முதல் தினசரி பார்சல் ரயில் இயக்கப்படுகிறது. இது 9ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும்.இதேபோல் மறுமார்க்கத்தில் இந்த ரயில் டெல்லியில் இருந்து ஏப்ரல் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னைக்கு தினசரி இயக்கப்படும். இதில் 5 அதிக அளவு திறன் கொண்ட பார்சல் வேகன்கள், 1 லக்கேஜ் வேகன் இடம்பெறும். இது தினசரி மாலை 6 மணிக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் டெல்லியில் இருந்து 10ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு புறப்படும். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories: