கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கும் நெல் மூடைகள்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே அரசு கொள்முதல் நிலையங்களில், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூடைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் சுற்றியுள்ள மேல்மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செங்குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முதல்போக நெல் நடவு செய்தனர். கடந்த மாத துவக்கத்தில் அறுவடை பணிகள் நடந்தன.

அறுவடை செய்த நெல்லை, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் செங்குளத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலயங்களில் விவசாயிகள் விற்பனை செய்தனர். இதுபோன்று விவசாயிகளிடம் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகளை கொள்முதல் செய்து திறந்த வெளியில், பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி  வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,  கொள்முதல் செய்த நெல் மூடைகளை, மதுரையில் உள்ள நெல் கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

தற்போது கோடை மழை ெபய்து வரும் நிலையில், திறந்த வெளியில் உள்ள இந்த நெல் மூடைகள் அனைத்தும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே நெல் மூைடகளை பாதுகாப்பாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: