அரசு ஊழியர் மருத்துவ செலவை அரசே ஏற்கும்

சென்னை: கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும்பட்சத்தில் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஆகும் மருத்துவ செலவை அரசே ஏற்கும். ரூ.2 லட்சம் கருணை தொகையும் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுசம்பந்தமாக வருவாய் நிர்வாக ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுகுறித்து மே 31ம் தேதிக்கு பிறகு மறுபரிசீலனை செய்து, அந்த சூழ்நிலையில் முடிவு எடுக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளார்.

Related Stories: