இந்திய மக்கள் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது: நாம் ஒன்றாக இணைந்து இந்த போரில் வெற்றி பெறுவோம்....ராகுல் காந்தி ட்விட்

டெல்லி: இந்தியா ஒரே மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது என்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நாம் ஒன்றாக இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109- ஐ எட்டி விட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ளது.

வெளிநாடு செல்லாத இந்தியர்களுக்கு பரவும் மூன்றாவது கட்டத்தை அது அடையவில்லை.ஊரடங்கு பரவலை தடுப்பதற்கு நல்வாய்ப்பாக இருப்பதால் அடுத்து வரும் சில நாட்களில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நோய்ப் பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா ஒரே மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; மதம், சாதி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியா ஒரு மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக  கொரோனா வைரஸ் உள்ளது. ஒரு பொதுவான நோக்கத்தை உருவாக்குவது இந்த கொடிய வைரஸின் தோல்வி ஆகும். இரக்கம், பச்சாத்தாபம் மற்றும் சுய தியாகம் ஆகியவை இந்த செயலின் மைய கருத்தாக உள்ளது. நாம் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கான எதிரான இந்த போரில் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: