சென்னையில் வழக்கம் போல் இறைச்சிக் கடைகள் இயங்கும்: மகாவீர் ஜெயந்தி அன்று மட்டும் விடுமுறை....மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் வழக்கம் போல் இறைச்சிக் கடைகள் இயங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தியான வரும் திங்கள் கிழமை மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் மக்கள் இறைச்சி கடையை நோக்கி படையெடுத்தனர். இதனால் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறினர்.

இவ்வாறு சமூக இடைவெளி இல்லாமல் அன்று முழுவதுமே பொதுமக்கள் இறைச்சி வாங்கியதால் கொரோனா மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒவ்வாரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தொடர்ச்சியாக இறைச்சி கடைகளை மூடப்படும் என உத்தரவு பிறப்பித்து வந்த நிலையில் சென்னை மாநகராட்சி தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து இறைச்சி மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. சென்னையில் வழக்கம் போல் இறைச்சிக் கடைகள் இயங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மகாவீர் ஜெயந்தி அன்று மட்டும் விடுமுறை

மகாவீர் ஜெயந்தியான வரும் திங்கள் கிழமை மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: