×

மார்ச் 25க்கு பிறகு காலாவதியாகி இருந்தாலும் வாகன, மருத்துவ காப்பீடு வரும் 21 வரை செல்லும்

புதுடெல்லி:   கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காப்பீடுகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய (ஐஆர்டிஏஐ) அதிகாரிகள் கூறியதாவது:    காப்பீடு விதிகளின்படி, காப்பீடுகளை புதுப்பிக்காவிட்டால் அவற்றின் பலன்களை தொடர்ந்து பெற முடியாது. காப்பீடு சட்டம் 1938, பிரிவு 64விபி இந்த கட்டுப்பாட்டை விதிக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த 64விபி விதியில் நிதியமைச்சகம் திருத்தங்கள் செய்துள்ளது.

இதன்படி, மேற்கண்ட ஊரடங்கு காலக்கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 25ம் தேதி முதல் இந்த மாதம் 15ம் தேதி வரை காப்பீடுகள் காலாவதியாகி, பிரீமியம் கட்டாவிட்டாலும், அவை இந்த மாதம் 21ம் தேதி வரை செல்லுபடியாகும். இதனால் வாகனங்கள் வைத்திருக்கும் 23 கோடி பேர் மற்றும் மருத்துவ காப்பீடு செய்துள்ள 40 கோடி பேர் பலன் அடைவார்கள். பிரீமியம் புதுப்பிக்காவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை என்றனர்.

Tags : Corona, Vehicle, Medical Insurance
× RELATED ஏப்-26: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை