தூத்துக்குடியில் தனிமைபடுத்தப்பட்டோர் வீடுகளில் குப்பை சேகரிக்க புதிய நடைமுறை

தூத்துக்குடி: கொரோனா பாதிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் குப்பையை அகற்ற தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது. தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு குப்பை எடுக்கச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் உடல் முழுவதும் மறைக்கும் கவச உடை அணிந்துள்ளனர். மேலும் முழுவதும் மூடப்பட்ட குப்பை வண்டியை எடுத்துச் செல்கின்றனர் சம்பந்தப்பட்ட வீடு முன் அந்த வாகனம் நிறுத்தப்பட்டதும் வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் குப்பையைக் கொண்டு வந்து வண்டியில் அவர்களே போட வேண்டும். இந்த வண்டிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் மட்டுமே குப்பை சேகரிக்கப்படும்.

ஒவ்வொரு யூனிட்டிற்கு உட்பட்ட  பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு தனித்தனியாக முழுவதும் கவர்  செய்யப்பட்ட குப்பை எடுக்கும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பின்னர் இந்த குப்பை வண்டி வேறு எங்கும் செல்லாமல் நேராக குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வெகு தொலைவில் உள்ள பகுதியில் ஆழமாகத் தோண்டி வைக்கப்பட்ட குழிக்குள் இந்த குப்பைகள் கொட்டப்பட்டு உடனடியாக அதிக மண் போட்டு மூடப்படுகின்றன. மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: