பிரதமர் நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி ரூ.105 கோடி நிதி

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளும் இயங்குகின்றன. இந்தியாவில் இருந்து கொரோனாவை அறவே ஒழிக்க, அனைவரும் நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்பேரில், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனது பங்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு ₹105 கோடி நிதியை வழங்கியுள்ளது. இதில், ₹5 கோடி எல்.ஐ.சியின் கோல்டன் ஜூப்ளி நிதியில் இருந்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எல்.ஐ.சி தலைவர் எம்.ஆர்.குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இந்தியா பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளது. இதில், மக்கள் நலனே எங்கள் லட்சியம்” என்று கூறப்பட்டுள்ளது.  

Related Stories: