அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்ல நடவடிக்கை: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: அத்தியாவசிய பொருட் களை தடை யின்றி கொண்டுசெல்ல நட வடிக்கை எடுக்கப் பட்டு ள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். சென்னையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், துறை அதிகாரிகள் நேற்று கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,122 பேர் கலந்து கொண்டனர். இதில் 411 பேர் டெல்லியிலே தங்கி உள்ளனர். அவர்களை டெல்லி அரசு தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்துள்ளது. 711 பேர் மட்டுமே தமிழகம் திரும்பி உள்ளனர். இதில் 617 பேர் கண்டறியப்பட்டு வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபோன்று கோவை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரும் இதற்கு உதவியாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உள்ளது. இது தமிழகத்திலும் பின்பற்றப்படுகிறது. இதையும் மீறி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தவிர தனியார் நிறுவனங்கள் செயல்பட்டால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட குழு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதியோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் பயனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே சென்று முதியோர் உதவித்தொகை நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பயனாளிகளுக்கு உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் வங்கி, தபால் துறை ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: